ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜாவின் 37வது நினைவேந்தல்…

(சுமன்)
கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களின் 37வது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் அக்கறைப்பற்று ஆலயடிவேம்பு பிரதேசத்தில் அம்பாறை தமிழ் ஊடகவியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், ஊடகவியலாளர் தேவராஜாவின் சகோதரர் அக்கறைப் பாக்கியன் உள்ளிட்ட குடும்ப உறவுகள், ஊடகவியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மறைந்த ஊடகவியாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களின் திருவுருவப் படத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சகோதரரினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, வருகை தந்தோர் அனைவராலும் சுடரேற்றி, மலர்தூவி, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

1985ம் ஆண்டு ஊடகவியாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்கள் கடத்தப்பட்டு மார்கழி மாதம் 25ம் திகதி படுகொலை செய்யப்பட்டதுடன். இலங்கையில் படுகொலைக்குள்ளான முதல் ஊடகவியாளர் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.