புத்தாண்டில் கரண்ட் ஷொக் ! ரூ. 360 ஆக இருந்த மின்கட்டணம் ரூ 2000 ஆகும் ! 780 ஆக இருந்த பில் ரூ.3310 ஆகும் !

மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமானால், இலங்கையின் கைத்தொழில் துறையின் வீழ்ச்சி வெகுவாக அதிகரிக்கும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் பெரேரா
இந்த அசாதாரண மின்கட்டண அதிகரிப்பில் அனைத்து பொருட்களும் சேவைகளும் காலவரையறையின்றி அதிகரிப்பதாகவும், அதனை மக்கள் தாங்கிக்கொள்ள நேரிடும் எனவும் தெரிவித்தார்.

30 யூனிட்டுக்கு குறைவாக மின்சார கட்டணம் செலுத்துபவர்கள் தற்போது 360 ரூபாய் செலுத்துகிறார்கள், ஆனால் விலையை உயர்த்தினால் 2000 ரூபாய் செலுத்த வேண்டும். 30-60 யூனிட் வரை உபயோகிப்பவர்கள், இப்போது 780 ரூபாய் செலுத்துகிறார்கள். இவர்கள் 3310 ரூபாய் செலுத்த வேண்டும். 60-90 யூனிட் வரை பாவிப்பவர்கள், இப்போது 1800 ரூபாய் செலுத்தினால், எதிர்காலத்தில் 4860 ரூபாய் செலுத்த வேண்டும். மக்கள் இன்று இருளில் தவிக்கின்றார்கள் என்ற அச்சத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்குப் புறமுதுகு காட்டி நிற்கின்றார்கள் இங்கு பெரும் குழப்பம் நிலவுகின்றது” என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் ஆலோசனைக் குழுவின் மேல்மாகாண பிரதிநிதி நிஷாந்த பிரித்திராஜ் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.