வவுனியாவில் போதை மாத்திரையுடன் இரு இளைஞர்கள் கைது

வவுனியாவில் போதை மாத்திரையுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் இன்று (01.01) தெரிவித்தனர்.

வவுனியா நெளுக்குளம் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது நெளுக்குளம் பகுதியில் போதை மாத்திரையுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளையடுத்து குறித்த இளைஞருக்கு போதை மாத்திரைகளை விநியோகம் செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இருவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.