“குருசெத கடன் வட்டி வீதம் அதிகரிப்பு – ஆசிரியர் சேவை சங்கம் எதிர்ப்பு!

அதிபர் – ஆசிரியர்களுக்கான குருசெத கடனுக்கான கடன் மற்றும் வட்டி தவணைகளை செலுத்தும் போது 9.5 சதவீதமாக இருந்த வட்டியை 15.5 சதவீதம் வரை அதிகரிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள அந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில், அரச வங்கிகள் மூலம் குருசெத கடன் திட்டத்தின் கீழ் குருசெத கடனுக்கான வட்டியை அதிகரிக்க வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அரசாங்கத்தினால் முன்மொழிக்கப்பட்ட பாதீட்டு திட்டத்தில் அதிபர் ஆசிரியர்களுக்கு எவ்விதமான கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அந்த சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.