வரையறுக்கப்பட்ட கல்முனை அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டறவு சங்கங்களின் சமாசத்திற்கான வருடாந்த பொதுகூட்டம்..

வரையறுக்கப்பட்ட கல்முனை அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டறவு சங்கங்களின் சமாசத்திற்கான வருடாந்த பொதுகூட்டம் சனிக்கிழமை(31) நடைபெற்றது.
குறித்த சமாசத்தின் வருடாந்த பொது கூட்டமானது தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் சமாசக் காரியாலய மண்டபத்தில் நடைபெற்றதுடன் புதிய நிர்வாக சபை உறுப்பினர் தேர்வும் இடம்பெற்றிருந்தது.
இதன் போது இக்கூட்டத்திற்கு சமாசத்தில் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சங்கங்களில் இருந்தும் நிருவாக சபை உறுப்பினருடன் வேறு ஒருவருமாக இருவர் மட்டும்  கலந்து கொண்டிருந்ததுடன் இயக்குநர் சபை உறுப்பினர்களாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட 9 உறுப்பினர்களும் தலைவர் உப தலைவர் செயலாளரை தெரிவு செய்திருந்தனர்.
முதலில் கூட்டத்திற்கு வருகை தந்தவர்களது வரவு பதிவு இடம்பெற்ற பின்னர் மங்கள விளக்கேற்றல் இறை வணக்கம் மறைந்த கூட்டுறவர்களுக்கு அஞ்சலி  செலுத்தப்பட்டது.
தொடர்ந்து வரவேற்புரை சென்ற வருட கூட்டறிக்கை வாசித்தல் அங்கீகரித்தல் 2022 ஆண்டிற்கான கணக்கறிக்கை சமர்ப்பித்தல் 2021 ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கை சமர்ப்பித்தல் 2023 ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத் திட்டம் அதிதிகள் உரைகள் பிரதம அதிதி உரை வேறு விடயங்கள் என ஆராயப்பட்டு நன்றி உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.
மேலும் புதிய இயக்குநர் சபை உறுப்பினர்களாக தெரிவான 9 பேர் புதிய தலைவர் புதிய  உட்பட செயலாளரை தெரிவு செய்தனர்.
இதற்கமைய புதிய தலைவராக சந்தானம் லோகநாதனும்  செயலாளராக விமலா கிருபைராஜா உப தலைவராக சொலமன் உத்தியம்மா செசிலியா ஆகியோரும் ஏனைய நிர்வாக சபை உறுப்பினர்களாக மயில்வாகனம் ஈஸ்வரசித்தன் ,புண்ணியமூர்த்தி யோகேஸ், இலட்சுமணன் முரளிதரன், கோமதி ரவிந்திரராசா ,ஆனந்தராசா வேவா, சுந்தரலிங்கம் துஷியந்தினி ,ஆகியோர் தெரிவாகினர்.
வரையறுக்கப்பட்ட கல்முனை அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டறவு சங்கங்களின் சமாசத்திற்கான புதிய நிர்வாக சபை  தெரிவில் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் பரீட் சமாசத்திற்கான கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஆர்.ராமகிருஸ்னன் திணைக்கள கூட்டுறவு கணக்காய்வாளர் திருமதி கே.ஜெகதீசன் சமாசத்தின் அங்கத்தவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.