சாவகச்சேரி நகரசபை உறுப்பினரின் பங்களிப்பில் உயர்தர மாணவர்களுக்கு கருத்தமர்வு.

சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் வீ.வியஜேந்திரனின் நிதிப் பங்களிப்புடன் தென்மராட்சிக் கல்வி வலயத்தின் ஒழுங்கமைப்பில் க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு தொடர் கருத்தமர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நகரசபை உறுப்பினரின் இரண்டு இலட்சத்து 11ஆயிரம் ரூபாய் நிதிப் பங்களிப்பில் குறித்த கல்வி ஊக்குவிப்புத் திட்டம் தென்மராட்சிப் பிரதேச பாடசாலைகளில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.