உண்மையான நண்பனே ஆபத்தில் உதவுவான்-சீனத் தூதரக பிரதித் தூதர் ஹ-வெய்

சாவகச்சேரி நிருபர்
உண்மையான நண்பனே ஆபத்தில் உதவுவான் என்பது போல நாம் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவுகிறோம் என இலங்கைக்கான சீனத் தூதரக பிரதித் தூதர் ஹ வெய் தெரிவித்துள்ளார்.
29/12  வியாழக்கிழமை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
சீனா-இலங்கைக்கு இடையில் பாரிய இடைவெளி எதுவும் கிடையாது.நாம் மிக நெருக்கமான உறவைக் கொண்டுள்ளோம்.ஒரு குடும்ப உணர்வை சீன -இலங்கை மக்கள் உணர்கிறார்கள்.
இலங்கை நாட்டு கல்வியில் தேவைப்பாடுகள் இருப்பதனை நாம் உணர்கிறோம். சீனாவில் தரமான கல்வி உள்ளது.அதனால் தான் மேற்படிப்புக்கான பெற்றோர் பிள்ளைகளை சீனாவுக்கு அனுப்புகின்றனர்.
சீன அரசின் இந்த உதவித்திட்டம் இரண்டு அரசுகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்துவதற்கானது அல்ல.இது இரண்டு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவைப் பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டம்.இந்த ஆண்டு இலங்கை பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளது.அந்தவகையில் சீன அரசாங்கம் 500மில்லியனை ஒதுக்கி இலங்கை நாட்டிற்கு உதவ தீர்மானித்துள்ளது.
அதன் முதற்கட்ட செயற்பாடே பாடசாலைகளுக்கான இந்த உதவி.அடுத்த கட்டமாக பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்க தீர்மானித்துள்ளோம்.
எமக்கு கொழும்பில் உள்ள மக்கள் மட்டும் நண்பர்கள் அல்ல யாழ்ப்பாண மக்களும் எமது நண்பர்களே.யாழ்ப்பாண மக்கள் மத நம்பிக்கையில் வேறுபட்டாலும் ஒரே நாட்டு மக்களாகவே நாம் பார்க்கிறோம். உண்மையான நண்பனே ஆபத்தில் உதவுவான் என்பது போல நாம் உரிய நேரத்தில் உங்களுக்கு உதவுகிறோம். எங்களுக்கிடையிலான உறவு சமூக அல்லது குடும்ப உறவாக அமைய வேண்டும்.இந்த உதவி ஆரம்பம் மட்டுமே.எதிர்காலத்தில் மேலும் பல உதவிகளை வழங்குவோம்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.