உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு மற்றுமொரு எதிர்க்கட்சி கூட்டணி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய கூட்டணியை உருவாக்க பல்வேறு அரசியல் கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுதந்திர மக்கள் காங்கிரஸ் மற்றும் லங்கா கூட்டமைப்பு ஆகியன இணைந்து புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றன.

ஒரு தனி நபருக்கு பதிலாக தலைமைத்துவ பேரணி தலைமையில் கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூர்வாங்க பேச்சு வார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாகவும், இந்த வார இறுதியில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் எனவும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இம்மூன்று குழுக்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டன.

முன்னாள் ஜனாதிபதி இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதற்கு முன்னர் அவர்களும் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான நிர்வாகத்தில் அங்கம் வகித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.