முட்டை விலை தொடர்பில் இன்றும் கலந்துரையாடல்

முட்டை விலையை கட்டுப்படுத்துவது குறித்து முடிவெடுப்பதற்கான பேச்சுவார்த்தை இன்றும் நடைபெற உள்ளது.

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்தும் ஆராயவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உற்பத்தி அளவு மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் திறன் ஆகியவற்றைக் கருத்திற்க் கொண்டு, முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்படும் என அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முட்டையை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கினால் சந்தையில் முட்டையின் விலையை 30 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என சில ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது சந்தையில் முட்டை விலை ரூ.55 முதல் ரூ.65 வரை விற்பனையாகிறது, கால்நடை தீவன பற்றாக்குறை மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பால் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என உள்ளூர் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.