பதுளையில் வைத்தியர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிவழி போராட்டம்

பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி மற்றும் அரசாங்க வைத்திய பிரதிச் செயலாளர் மீது கும்பல் தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று (2) பிற்பகல் பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் 18 வயது யுவதியை நேற்று (01) மாலை பதுளை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு வரும் போது ஏற்கனவே உயிரிழந்திருந்த நிலையில் வைத்தியசாலைக்கு தாமதமாக கொண்டு வரப்பட்டதால் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியப்படுத்தியதையடுத்து, ஆத்திரமடைந்த சிலர் வைத்தியசாலையில் வன்முறையில் ஈடுபட்டதாகவும், அவர்கள் தம்மைத் தாக்கியதாகவும் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த வைத்தியர் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக பதுளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.