அரச ஊழியர்களுக்கு இன்று முதல் விசேட முற்கொடுப்பனவு

அரச அதிகாரிகளுக்கு 4,000 ரூபா விசேட முற்கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை இன்று(02) ஆரம்பிக்கப்படவுள்ளது.

அரச ஊழியர்களுக்கான இந்த விசேட முற்கொடுப்பனவு அடுத்த மாத இறுதி வரை வழங்கப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த குறிப்பிட்டார்.

இந்த விசேட முற்கொடுப்பனவிற்கான சுற்றுநிருபம், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்கு பின்னர் எந்தவொரு கொடுப்பனவையும் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என குறித்த சுற்றுநிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.