பணியாளர்கள் பற்றாக்குறை-11 அலுவலக தொடரூந்துகள் ரத்து

பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக, இன்று காலை சேவையில் ஈடுபடவிருந்த 11 அலுவல தொடரூந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
களனிவெளி, கரையோர, புத்தளம் மற்றும் பிரதான தொடருந்து மார்க்கங்களில் சேவையில் ஈடுப அலுவலக தொடரூந்துகளே ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தி தலைவர் சுமேத சோமரட்ன தெரிவித்தார்.
500க்கும் மேற்பட்ட தொடரூந்து நிலைய அதிபர்கள் ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிட காரணமாக இன்றைய தினம் 60 தொடரூந்து சேவைகள் ரத்தாகக்கூடும் என அவர் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், தொடரூந்து திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு புதியவர்களை உள்வாங்குவது தொடர்பில், போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும், தொடரூந்து திணைக்ள அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தொடரூந்து சேவை இடம்பெறாமை காரணமாக, இந்த வருடத்தின் முதலாம் நாள் பணிக்கு சென்ற பலர் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.