வரிசட்டங்களை சாதாரண முறையில் நடைமுறைபடுத்த வேண்டும் இல்லாவிடில் தொழிற்சங்க போராட்டம் தொடரும்-விஜயரட்ணம் தர்சன் எச்சரிக்கை!!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த சங்கத்தின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் விஜயரட்ணம் தர்சன்,

(அரசு நடைமுறைப்படுத்தியுள்ள வரிக்கொள்கையின் மூலம் வருடம் ஒன்றுக்கு இரண்டு மாதத்திற்கு மேற்பட்ட வேதனத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் வைத்தியர்கள் இருக்கின்றனர். இது வைத்திய துறையை மட்டுமல்ல ஏனைய தொழிற்சங்கங்களையும் பாதித்துள்ளது.

சென்ற வருடம் வரிக்கொள்கையின் காரணமாக 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.

எவரையும் பாதிக்காத வகையில் வருமான வரிக்கொள்கை பாராளுமன்றம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மனிதவலு பற்றாக்குறையை வைத்தியதுறையில் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் ஏற்படுத்தும் இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.

பாராளுமன்ற கட்சி தலைவருக்கும்,பாராளுமன்றத்தில் தோற்றுவித்த குழுக்களுக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் வாய்மூலமாகவும் எழுத்து மூலமாகவும் வரிக்கொள்கை தொடர்பாக தெரியப்படுத்தி இருந்தோம்.

வரிக்கொள்கை உடனான இறுதி வாசிப்பின் போது பாராளுமன்ற முன் எதிர்ப்பை தொரிவித்திருந்தோம். அதனை செவிமடுக்காமல் வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

எதிர்வரும் காலங்களில் வருமான வரிக் கொள்கையை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை ஆராயவுள்ளோம்.

எம்முடைய கோரிக்கை ஏற்று வருமான வரிசட்டங்களை சாதாரண முறையில் நடைமுறைபடுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் தொழிற்சங்க போராட்டம் தொடரும்.)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.