காரைதீவு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினராக நமச்சிவாயம் ஜெயகாந்தன் பதவி ஏற்றுக்கொண்டார்.

காரைதீவு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்ற சத்தியப் பிரமாண நிகழ்வின் போது பிரதேச சபைக்கான கௌரவ உறுப்பினராக நமச்சிவாயம் ஜெயகாந்தன் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வின் போது தவிசாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி இவ்வாறு அமைந்திருந்தது
“உங்களது பணி சிறப்பாக நடைபெற கண்ணகி அம்மாளின் ஆசீர்வாதத்துடன் சிறப்பாக காரைதீவு மக்களினுடய பணியை தொடர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நமச்சிவாயம் ஜெயகாந்தன் ஆகிய சகோதரர் இன்று காரைதீவுப் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினராக பதவியேற்றிருக்கின்றார் மக்களுக்கான மானசீகமான செயற்பாட்டை முன்தொடர இறை அருளோடு தொடர்சியாக செயற்படுத்தவும் என்னுடய ஆதரவுகளையும் நிச்சயமாக வழங்குவேன் என்றும் எதிர்காலத்தில் உங்களைப்போன்ற இளைஞைர்கள் இவ்வாறு காரைதீவுப் பிரதேச சபையினுடாக காரைதீவு மக்களுக்கு அளப்பெரிய சேவைகளையாற்ற முன்வரவேண்டும் இவ் இளவயதிலே நீங்கள் இப்பதவியில் தெரிவு செய்யப்படுவதனையிட்டு மகிழ்வடைவதோடு உங்களுடய பணிக்கு ஒத்துளைப்பு நான் தொடர்ச்சியாக வழங்குவேன் என்றும் கூறிக்கொள்வதோடு உங்களது பணி சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.”என்று கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.