மோட்டார் சைக்கிள் விபத்து – தந்தை மகன் பலி!

கட்டுவன – ஊருபொக்க வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (02) அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த தந்தை 66 வயதானவர் என்றும் மகனுக்கு 26 வயது என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் வேகந்தவல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

சம்பவத்தில் உயிரிழந்த தந்தை திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக கடமையாற்றிவந்ததாக தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.