உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்..

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அறிவித்தலின் பேரில், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் கடமைக்கான தேவைகளை கருத்தில் கொண்டு குறித்த பதவிகளுக்கான நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியில் பணியாற்றுவதற்காக 06 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 17 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் 06 பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக 13 பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் 08 பொலிஸ் அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், 19 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களும் இரண்டு பெண் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.