அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பேருந்துகளுக்கான கட்டணம் 10% குறைப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் அறவிடப்படும் கட்டணம் 10 வீதத்தால் குறைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பஸ் கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.