முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து விலை கணிசமாக குறைந்தது!

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முட்டையின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

நாரஹேன்பிட்ட, வெலிசர மற்றும் பொகுந்தர மற்றும் பல பிரதேசங்களில் உள்ள பொருளாதார நிலையங்களில் முட்டை விலை 55 ரூபாவாக குறைந்துள்ளது.

இந்த வார அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ​​வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, முட்டையின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், அவற்றை இறக்குமதி செய்வதற்கான யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி, தேவை ஏற்பட்டால் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இதேவேளை வர்த்தக அமைச்சர் தொழிலை அழிக்க முயற்சிப்பதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு முட்டைக்கு 2 ரூபா மாத்திரமே இலாபம் என்று சில சங்கங்கள் தெரிவித்துள்ளன.

முட்டை இறக்குமதி செய்யப்பட்டால், சந்தையில் விற்பனை செய்யும் விலையை விட குறைந்த விலைக்கு ச விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் 25 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டால், 20 ரூபாவாக குறையும் என சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்தார்.

மக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில் தொழில்துறையைப் பாதுகாக்க மாத்திரமே விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.