12 புதிய அமைச்சரவை அமைச்சர்களும் 6 ஆளுநர்களும் இம்மாத இறுதியில் நியமனம்! – SLPP முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை!

12 புதிய அமைச்சரவை அமைச்சர்களும் 6 ஆளுநர்களும் இம்மாத இறுதியில்  நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  வஜிர அபேவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,  பொதுஜன பெரமுன, ஐ.தே.க ஆகிய இரு கட்சிகளும்  தமது தரப்பினரை ஆளுநர்களாக பெயர் குறிப்பிடவும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.