இரு உந்துருளிகள் மோதி விபத்து – குடும்பஸ்தர் உயிரிழப்பு: யாழில் சம்பவம்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி விபத்தில் படுகாயமடை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேம்படி உடுத்துறையை பிறப்பிடமாகவும் கொடுக்குளாயை வசிப்பிடமாகவும் கொண்ட லதன் என்று அழைக்கப்படும் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

நேற்று முன்தினம் வெற்றிலைக்கேணியில் நடந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மருதங்கேணி பிரதேச செயலக ஊழியர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த போது சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்,

இரு உந்துருளிகள் மோதி விபத்து - குடும்பஸ்தர் உயிரிழப்பு: யாழில் சம்பவம் | Tragedy Befell A Government Official In Jaffna

ஆசிரியையான தனது மனைவியை வெற்றிலைக்கேணியிலுள்ள பாடசாலையொன்றில் இறக்கி விட்டு ஆழியவளைக்கு திரும்பி வந்தபோது, அவர் அணிந்திருந்த தலைக்கவசத்தின் பட்டி இணைக்கப்பட்டிருக்கவில்லையென்றும், தலைக்கவசம் கழன்று விழுந்ததை தொடர்ந்து விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்கரையிலிருந்து பிரதான வீதிக்கு உந்துருளியில் வந்த ஒருவரும், பிரதேச செயலக உத்தியோகத்தரும் மோதி விபத்திற்குள்ளாகினர்.

ஆபத்தான நிலையிலிருந்த பிரதேச செயலக உத்தியோகத்தர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கான யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.