சம்பந்தனைச் சந்தித்தார் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

சம்பந்தனைச் சந்தித்தார் மஹிந்த..முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடினார்.

சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

தற்போதைய அரசியல் நிலைவரம் உட்பட்ட பல விடயங்கள் இந்த சந்திப்பில் பேசப்பட்டன.

எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் ஜனாதிபதி ரணிலின் முயற்சிகளுக்கு ஆதரவு தருமாறு இதன்போது சம்பந்தன் மஹிந்தவிடம் கோரியதாகவும், மஹிந்த அதற்கு சாதகமான பதிலை வழங்கியதாகவும் தெரியவருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.