தனங்கிளப்பு கிராமம் ஊடாக இ.போ.ச பேருந்து சேவை;பாடசாலை மாணவர்கள் பயனடைவு.

சாவகச்சேரி நிருபர்
யாழில் இருந்து மறவன்புலவு ஊடாக கொடிகாமம் சென்றடையும் 805ஆம் இலக்க வழித்தட அரச பேருந்து 02/01 திங்கட்கிழமை தொடக்கம் தனது சேவையை தனங்கிளப்பு கிராமம் ஊடாகவும் விஸ்தரித்திருப்பதால் பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் பயனடைந்துள்ளனர்.
கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தென்மராட்சியின் தனங்கிளப்பு  கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது குறித்த கிராம மக்கள் விடுத்த கோரிக்கையின் பயனாக தனங்கிளப்பு ஊடான பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் தனங்கிளப்பில் இருந்து நீண்ட தூரம் நடந்து சென்று பேருந்தில் ஏறிய மாணவர்கள் வீட்டு வாயிலில் நின்று பேருந்தில் ஏறக்கூடிய நிலை காணப்படுவதாக தனங்கிளப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பேருந்து சேவையை அங்கஜன் இராமநாதனின் பிரதிநிதியான சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் தி.தங்கவேலு பேருந்தில் பயணம் மேற்கொண்டு ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.