விரைவான பொருளாதார சீர்திருத்தத்திற்கான புதிய கருவிகளில் இலங்கை கவனம் செலுத்துகிறது -ஷெஹான்

பாரம்பரிய முறைகளிலிருந்து விலகி விரைவான பொருளாதார சீர்திருத்தத்திற்கான புதிய கருவிகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை கவனம் செலுத்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் உதவி செயலாளர் நாயகம், உதவி நிருவாகி மற்றும் UNDP யின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணியகத்தின் பிராந்திய பணிப்பாளர் கன்னி விக்னராஜாவுடன் நிதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி, கடன் முகாமைத்துவம் மற்றும் ஏனைய சீர்திருத்தங்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சேமசிங்க ஐ. நா அதிகாரியுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

எதிர்காலத்தில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் UNDP இலிருந்து நிதியுதவி வழங்குவதற்கான சாத்தியமான பகுதிகள் தொடர்பிலும் கலந்துரையாடல் கவனம் செலுத்தியதாக சேமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு UNDP மூலம் எதிர்கால ஆதரவை வழங்க ஐ. நா அதிகாரி ஒப்புக்கொண்டதுடன்,அரச நிறுவனங்களில் திறனை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.