டயனா கமகே தொடர்பில் இன்று பிறப்பித்த உத்தரவு!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் இருந்து உடனடியாக அறிக்கையைப் பெற்று, இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.

டயனா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு என்பன போலியானவை எனவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி சமூக ஆர்வலரான ஓஷல ஹேரத் சமர்ப்பித்த முறைப்பாடு இன்று அழைக்கப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

உரிய தூதரக அறிக்கை கிடைத்த பின்னர் வழக்கு தொடர்பான உத்தரவுகளை பிறப்பிப்பது இலகுவாக இருக்கும் எனவும் அதுவரை சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவு பிறப்பிப்பது பொருத்தமானதல்ல எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரிக்கும் போது இது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் அவசியமில்லை என தோன்றுவதாகவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.