ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

வடக்கு ரயில் வீதியில் இன்று (05) முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹவ மற்றும் ஓமந்தை பகுதிகளுக்கு இடையிலான ரயில் வீதியின் நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்படுவதால் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மாத்திரம் ரயில் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளுக்கு அநுராதபுரத்தில் இருந்து பேரூந்துகள் மூலம் யாழ்ப்பாணம் செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.