எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பியுள்ள கேள்வி

உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு ஒதுக்கீடு வழங்கப்படுமா இல்லையா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் நீதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அரசாங்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணங்களை கூறி வருவதை அறியக்கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி உரிய நேரத்தில் தேர்தலை நடத்தத் தேவையான முன்னேற்பாடுகளையும், வசதிகளையும், ஒதுக்கீடுகளையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்குமா என்பதை நேரடியாக தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உறுதியான தெளிவான பதிலை வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய (05) பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.