யானை தாக்குதலில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உடும்பன்குள வயலில் வேளாண்மை காவல் காத்துவந்த விவவாயி ஒருவர் இன்று (5) அதிகாலை யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கவேலாயுத புரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான சசிகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வழமைபோல சம்பவதினமான நேற்று இரவு வேளாண்மையை காட்டுவிலங்ககளில் இருந்து பாதுகாப்பதற்காக சென்று கால்காத்துவந்த நிலையில் அதிகாலை 2 மணியளவில் யானை தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இவரின் சடலம் நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதனைககாக வைத்தியசாலைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவரவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.