நௌபர் மௌலவி உட்பட 25 பேரின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சதி மற்றும் கொலை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நௌபர் மெளலவி உட்பட 25 பிரதிவாதிகளின் பிணை கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (5) நிராகரித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான தமித் தொட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை அறிவித்த தலைமை நீதிபதி தமித் தொட்டவத்த, தற்போது பிரதிவாதிகளை பிணையில் விடுவிப்பது பொருத்தமானதல்ல. அதன்படி, கோரிக்கைகளை நிராகரிக்கிறோம் என்று கூறினார்.
அதன்பிறகு, வழக்கை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.