அக்கறைப்பற்று திகோ/ ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபர்,ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா…

அக்கறைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கடமை புரிந்து இடமாற்றம் பெற்றுச்செல்லும் மற்றும் ஒய்வு பெற்றுச்செல்லும் ஆசிரியர் மற்றும் முன்னாள் அதிபர் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா இன்று (05/01/2023) வியாழக்கிழமை 11.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வின் பாடசாலையின் முன்னாள் அதிபர் திரு.அருள்பிரகாசம் சுமன், கணித ஆசிரியராகவும் பகுதி தலைவராகவும் கடமையாற்றிய திருமதி.கந்தசாமி கமலேஸ்வரி,
விஞ்ஞான ஆசிரியராகவும் பிரதி அதிபராகவும் கடமையாற்றிய திரு.பாலிப்போடி சதாசிவம்,
விஞ்ஞான ஆசிரியராகவும் பகுதி தலைவராகவும் கடமையாற்றிய திரு.கணபதிப்பிள்ளை கமலநாதன் மற்றும் ஆங்கில ஆசிரியராகவும் உதவி அதிபராகவும் கடமையாற்றிய திருமதி. லக்ஷாந்தி செல்வராஜா ஆகியவர்கள் இன்று சேவைநலன் பாராட்டி பொண்ணாடை அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இன் நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்களான திரு.க.ஜெயந்தன் மற்றும் திரு.சி.மதியழகன், ஆசிரியர்கள் ஏன அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.