கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த அவுஸ்திரேலியாவின் ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்த இலங்கைக்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பெளல் ஸ்டீபன்ஸ் நேற்று பிரதமரை சந்தித்தார்.

கலந்துரையாடலின் போது, ​​மீன்பிடித் தொழில் தொடர்பான தொடர்பாடல் வலையமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதமர், GPS வசதிகளை வழங்குவதற்கு ஆதரவு கோரினார்.

ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களை கவரும் வகையில் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்த பல பல்கலைக்கழகங்களை இலங்கையில் நிறுவ முடியும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

75 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் பெறுமதியான மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியதற்காக அவுஸ்திரேலியா அரசாங்கத்திற்கு பிரதமர் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்

, உயர்ஸ்தானிகர் ஸ்டீவன்ஸ் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பாரிஸ் சொசைட்டி கூட்டங்களுடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.