இலங்கை கடுமையான சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு மத்தியில் உள்ளது -சமூக நீதிக்கான தேசிய இயக்கம்

இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மேலதிகமாக, பொருத்தமான தீர்வுகள் தேவைப்படும் பாரிய சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு மத்தியில் நாடு இருப்பதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

தேசிய இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, சில பிரச்சினைகள் மற்றும் எடுக்கக்கூடிய ஆரம்ப நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்தை செலுத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது, ​​நாட்டில் 29% ஆக இருந்த காடுகளின் அடர்த்தி இன்றுவரை அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் 16% ஆகக் குறைந்துள்ளது.

நாட்டில் நாளாந்தம் ஒரு காட்டு யானையாவது இறப்பதாகவும், 2022 ஆம் ஆண்டில் 395 காட்டு யானைகள் இறந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அதே சமயம் மனித யானை மோதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் இருப்பதாகவும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

விவசாயத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் உணவு நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும், இது நாட்டில் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாடு எதிர்நோக்கும் அனைத்து அபாயங்கள் குறித்தும் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.