சீனா – தாய்லாந்து – இந்தியாவுடன் வர்த்தக உடன்படிக்கை..! கூட்டினையும் இலங்கை

சீனா, தாய்லாந்து மற்றும் இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை நம்புவதாக உலக செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான இலங்கையின் பிரதான பேச்சுவார்த்தையாளர் கே.ஜே.வீரசிங்க குறித்த உலக செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இலங்கையுடன் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொண்டுள்ள சீனா மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.

இலங்கையில் முக்கியமான பொருளாதார பங்காளித்துவங்களை உருவாக்குவதும் முதலீட்டுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதன் நோக்கமாகும் என சுட்டிகாட்டினார்.

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சீனா, தாய்லாந்து மற்றும் இந்தியாவுடன் வர்த்தக உடன்படிக்கைகளை எட்டுவதே தனது இலக்கு எனவும் அவர் கூறியள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.