பேருந்துக்குள் பாலியல் தொல்லை – இளம் வைத்தியர் கைது

பேருந்துக்குள் கடற்படை தாதி ஒருவரின் உடலில் சாய்ந்து துன்புறுத்திய சந்தேகத்தில் வைத்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக தலங்கம காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட கமரா பொருத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி மூலம் வைத்தியர் தாதியை வீடியோ எடுத்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதேசத்தின் சிரேஸ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் கைது செய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேக நபர் மேல் மாகாணத்தில் உள்ள போதனா வைத்தியசாலை ஒன்றில் பணிபுரிபவராவார்.

 

 

பாதிக்கப்பட்ட தாதி இது குறித்து பயணிகளுக்கு தெரிவித்ததையடுத்து, பயணிகள் குழுவொன்று வைத்தியரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளது.

சந்தேக நபர் மதுபோதையில் இருந்தமை தெரிய வந்ததையடுத்து, கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்தியர் முன்னிலையில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.