தமிழ்த் தேசியத்தின் பெரும் சக்தியாக இருந்த கிழக்கு மாகாணம் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது…

 

தமிழ்த் தேசியத்தின் பெரும் சக்தியாக இருந்த கிழக்கு மாகாணம் இன்று சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்;கின்றது. எங்கள் வறுமையைக் காரணமாகக் காட்டி எமது உரிமையைப் பறிக்க நினைக்கின்றார்கள் என ஜனநாயகப் போராளிகள் கட்சின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

வாகரை புச்சாக்கேணியில் இடம்பெற்ற ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தேசிய பொங்கல் விழாவில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்.

எமது போராட்ட காலத்திலே இந்த மண்ணிலே பல வீPரர்கள், பிறந்தார்கள், வாழ்ந்தார்கள், வீரர்களைப் பெற்றவர்கள் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வரலாற்றுப் பெருமைக்குரிய மட்டக்களப்பில் வாகரை மண்ணிலே எங்கள் ஜனநாயக வழிப் போராட்டம் இன்று மக்கள் எழுச்சி கொண்டிருப்பதையிட்டு நாம் பெருமகிழ்ச்சியடைகின்றேன். இந்த எழுச்சிநாளை இந்த மண்ணில் கொண்டாடுவது தமிழ்த் தேசிய எழுச்சி வெற்றியின் ஆரம்ப நாளாகவே பார்க்கின்றேன்.

நீண்டதொரு போராட்டத்தில் மிகவும் துன்பகரமான வலிகளைச் சந்தித்து வாழ்ந்த எமது கிழக்கு மக்களே. இன்று இந்த மண் பல கூறுகளாகப் பிரிக்கப்பட்டு, தமிழ்த் தேசியத்தின் பெரும்பான்மை அழிக்கப்பட்டு எதிர்காலத்தில் நாங்கள் இந்த மண்ணை விட்டு விரட்டியடிக்கப்படும் அல்லது நாங்கள் ஆதிக்குடிகள் என்ற பெயரில் மாத்திரம் ஒரு கிராமத்துக்குள் ஒடுக்கப்படும் சூழலில் தான் இந்த கிழக்கு மண் இன்று ஒரு பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கின்றது.

இந்த மண் எம்மிடமிருந்து பறிபோகக் கூடிய ஒரு அபாயகரமான சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. எமது மக்கள் ஒன்றை மட்டும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு என்பது தனித்தனியானவை அல்ல. தமிழர் தாயகமென்பது வடகிழக்கு இணைக்கப்பட்டது தான். தற்போது பிரிக்கப்பட்டுள்ள வடக்கையும் கிழக்கையும் எதிர்காலத்தில் ஒன்றாக இணைத்து பலம்மிக்க ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதன் ஊடாகத்தான் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்ற கிழக்கு மாகாணத்தை எம்மால் மீட்க முடியும்.

தமிழர்களின் அடயாளத்தை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற சிங்களத் தேசியவாதத்தின் அடிவருடிகளால் கிழக்கு மாகாணம் கூறுபோடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கக் கூடிய வீரம்மிக்க துணிச்சலான தலைமைத்துவம்; இந்த வேளைகளில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.

அபிவிருத்தி என்பது எமக்கு முக்கியமானதுதான். நாங்கள் போர்க்காலத்தில் ஒரு முகாமைத் தாக்கி கைப்பற்றியதன் பினனர் அந்தப் பிரதேசத்தை எவ்வாறு புனரமைக்கலாம் என்ற அபிவிருத்தியையும் திட்டமிட்டுத் தான் யுத்தத்தை நடத்துவோம்.  தற்போது நாங்கள் உரிமை இழந்த ஒரு தரப்பாக, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகமான நிற்கின்றோம். இந்த நிலையிலே எமக்கு முதன்மையாக இருப்பது எமது உரிமை. இந்த உரிமையை நாங்கள் வென்றெடுக்க வேண்டும். வறுமை எம்மைத் தாக்கிக் கொண்டிருக்கின்றது. எங்கள் வறுமையைக் காரணமாகக் காட்டி எமது உரிமையைப் பறிக்க நினைக்கின்றார்கள்.

எமது ஆயதப் போராடடம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் மிகவும் மோசமான அரசியல் நிலைமைகளை நாங்கள் இங்கே பாhர்;க்கின்றோம். அந்த வகையிலே இன்று நாங்கள் எமது மக்களுடைய விடுதலையை வென்றெடுப்பதற்கான ஒரு அரசியற் பேரியக்கமாக ஜனநாயக ரீதியாக சர்வதேச மட்டத்திலும், உள்நாட்டிலும் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக எமது தாயக நிலப்பரப்பிலே கடமைகளை ஏற்று மக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

ஆயுதப் போராட்ட காலத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் பல மாவட்டங்களுக்கும் சென்று போராடிய போராளிகள் கிழக்கு மாகாணப் போராளிகளே என்பதில் நாங்கள் என்றும் பெருமை கொள்கின்றோம். அந்தளவிற்கு கிழக்கு மாகாணம் தமிழ்த் தேசியத்தின் பெரும்சக்தியாக இருந்தது. இன்று அது சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்;கின்றது.

எனவே கிழக்கு மாகாணத்தை தமிழ்த் தேசியத்தினுடைய பெரும் சக்தியாக மீண்டௌ எமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க என்றும் எம்முடன் தோளோடு தோள் நிற்பீர்கள் என நம்புகின்றோம் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.