காங்கேசந்துறை கப்பல் சேவை தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்!

யாழ்.காங்கேசந்துறை கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிப்பது தொடர்பில் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜவுடன் அமைச்சின் செயலாளர் அடங்கிய குழு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டது.

காங்கேசந்துறை கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு முன்னேற்பாடாக இறங்குதுறை மற்றும் சுங்கப் பகுதி கட்டுமாணங்களை ஆரம்பிப்பது தொடர்பாக கப்பல் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரூவான் சந்திர தலைமையிலான குழுவினர் வடமாகாண ஆளுநருக்கு தெளிவு படுத்தினர்.

குறித்த கலந்துரையாடலில் சுங்கத்திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.