தண்டவாளத்தில் கழுத்தை வைத்து தற்கொலை செய்துக்கொண்ட இளைஞன்

மாத்தறை காளிதாஸ வீதியில் உள்ள தொடருந்து கடவை பகுதியில் தண்டவாளத்தில் கழுத்தை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று பிற்பகல் நடந்துள்ளது.

 

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற தொடருந்து இளைஞனின் கழுத்தின் மீது ஏறியதில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் உடல் மாத்தறை தொடருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மாத்தறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

 

 

தற்கொலை செய்துக்கொண்ட இளைஞனின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.