யாழில் வாள்வெட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது

நபர் ஒருவர் மீது வாள்வெட்டினை மேற்கொண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் சுன்னாகம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மயிலங்காடு பகுதி வீதியில் நேற்றிரவு (07) 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத 04 நபர்களால் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

 

 

யாழில் சரமாரியாக வாள்வெட்டு - ஆயுத தாராகிகள் தப்பி ஓட்டம் | Person Was Slashed With A Sword In Jaffna

வாள்களால் வெட்டப்பட்டு காயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச் சம்பவத்தில் ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர்  படுகாயமடைந்துள்ளார்.

வாள்வெட்டினை மேற்கொண்டவர்கள் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மேலும் இச்சம்பவம் குறித்து சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.