தமிழ் தேசியக் கட்சிகள் எத்தகைய தடைகள் வந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே பயணிக்கும்-ரெலோ ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

(பலரின் உயிர் தியாகத்தால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிலரின் தேவைக்காக திறக்க முடியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய கட்சி பல்வேறு தியாகங்கள் இழப்புக்களை சந்தித்து உருவாக்கப்பட்டது.

சிலர் தமது குறுகிய அரசியல் நோக்கத்துக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்தார்கள் வாக்களிப்பில் சில மாறுதல்கள் தேர்தல்களில் மாற்றங்கள் ஏற்படலாம் ஆனால் நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே பயணிக்க விரும்புகிறோம்.

தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி சிவில் அமைப்பினர் 8 மாவட்டங்களிலும் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பலரின் கோரிக்கைகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்த ஓர் அரசியல் கட்சியாக தமிழ் தேசியம் சார்ந்த அனைத்து தரப்பினரையும் உள்ளீர்க்க வேண்டும் என.

தற்போதைய நாட்டின் ஜனாதிபதி தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினை தொடர்பில் பேசுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழைத்திருக்கிறார்.

நாங்கள் அவருக்கு தெளிவாக கூறி இருக்கிறோம், தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்பில் பேசுவதற்கு முன்பு நல்லெண்ணத்தை வெளிக்காட்டு முகமாக சில விடயங்களை செய்ய வேண்டும் எனக் கூறி இருக்கிறோம்.

அதாவது காணி அபகரிப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற நிபந்தனைகளை அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளோம்.

ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைக்க வேண்டும் என நினைப்பவர்கள் தொடர்பில் மக்கள் தெளிவாக இருக்கும் நிலையில் தமிழ் மக்களுக்காக பயணிக்கும் தமிழ் தேசியக் கட்சிகள் எத்தகைய தடைகள் வந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே பயணிக்கும்.

குறித்த ஊடக சந்திப்பில் தமிழக விடுதலை இயக்கத்தின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் மற்றும் யாழ் மாநகர பிரதி முதல்வர் துரைராசா ஈசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.