விபச்சாரத்தில் ஈடுபட காரணத்தை சொன்ன யாழ் வவுனியா அழகிகளின் சோகம்..!

எங்கும் வேலை கிடைக்காத நிலையில், குடும்பத்தை கவனிப்பதற்காக விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கொழும்பு விபச்சார விடுதியில் கைதான யாழ், வவுனியா யுவதிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்து கொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 7 இளம் யுவதிகள் அண்மையில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கைதான யுவதிகளின் வாக்குமூலங்கள் மனதை உருக்குவதாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ன.

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் மஹரகம பிரதேசத்தில் நடத்தப்பட்ட இந்த விபச்சார நிலையத்தில் பணிபுரிந்த யுவதிகள் யாழ்ப்பாணம், வவுனியா, ஹந்தலை, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, பம்பரக்கலை, நாவலப்பிட்டி பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கபப்ட்டிருந்தது.

அதேவேளை கொழும்பில் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்வதாக குறிப்பிட்டு, விபச்சாரத்தில் ஈடுபட்ட இந்த யுவதிகள், தமது குடும்பத்திற்கு பணம் அனுப்பி வந்தமையும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.