முச்சக்கரவண்டியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தை

தலவாக்கலை இந்து கோவிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கைக்குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

பின்னர், குழந்தை லிதுல பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி தெரிவித்தார்.

முச்சக்கரவண்டியானது தினமும் ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், தலவாக்கலை லிதுல நகரசபை ஊழியர்கள் நகரை சுத்தப்படுத்த வந்த போது முச்சக்கரவண்டிக்குள் குழந்தை அழும் சத்தம் கேட்டு பார்த்த போது குழந்தை ஒன்று இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

குறித்த குழந்தை பிறந்து சுமார் 12-14 நாட்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் குழந்தையை விட்டுச் சென்றவர்கள் தொடர்பில் சிசிரிவி காணொளிகளை வைத்து தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

லிதுல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.