யாழில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி இன்று அகழ்வுப் பணி

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதியில் தனியாருக்குச் சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

இன்று காலை 10 மணியளவில் யாழ். நீதவான் நீதிமன்றப் பதிவாளர் சுந்தரமூர்த்தி பிருந்தாவின் தலைமையில் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் யருள் ஆகியோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.

இதன்போது பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.