இலங்கையின் 75ஆவது சுதந்திரத்தை முன்னிட்டு நாணயக்குற்றி,முத்திரைகள் வெளியிடப்படவுள்ளன

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியினால் ஆயிரம் ரூபா பெறுமதியான விசேட நினைவு நாணயமும் தபால் திணைக்களத்தினால் இரண்டு நினைவு முத்திரைகளும் வெளியிடப்படவுள்ளன.

மறைந்த தலைவர்களான டி.எஸ்.சேனநாயக்கா, ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா ஆகியோரின் உருவப்படங்கள் ஒரே முத்திரையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இது வெளியிடப்படவுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

இதேவேளை தேசியத்தை குறிக்கும் வகையில் ஐம்பது ரூபாய். பெறுமதியான மற்றுமொரு முத்திரையும் வெளியிடப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.