யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் நல்லூரில் திறப்பு…

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தொகுதிக்கான பிரதான அலுவலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் திறந்து வைக்கப்பட்டது.


யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித்தெரு பகுதியில் குறித்த அலுவலகம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவால் காலை 9.00 மணியளவில் திறக்கப்பட்டது.


இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளருமான உமாச்சந்திரா பிரகாஷ், யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளர் விஜய்காந்த், யாழ்.மாவட்ட அமைப்பாளர் கு.மதன்ராஜ், யாழ்ப்பாணத் தொகுதி பிரதம அமைப்பாளர் ஜெயேந்திரன், தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.