தனியார் வகுப்பில் மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆண்கள் பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஹொரவபொத்தானையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரவபொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லங்காதீபவின் தகவலின்படி, சந்தேகநபர் நடத்தும் தனியார் வகுப்பில் கலந்து கொண்ட வேளையில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

சந்தேக நபர் கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் எனவும், 10 வயதுடைய பெண் குழந்தையின் தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் வகுப்பின் போது பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாகவும், அன்றைய தினம் வகுப்பிலிருந்து வீடு திரும்பியதும் பெற்றோருக்கு தெரியப்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பாலியல் துஷ்பிரயோகம் குறித்து பெற்றோருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துஷ்பிரயோகம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து ஹொரவபொத்தானை பொலிஸார் சந்தேக நபரை நேற்று கைது செய்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.