கூட்டமைப்பை உடைத்த வரலாற்றுத் துரோகம் வேண்டாம். தமிழரசு கட்சி தனித்து விடும்.-கே.வி தவராசா

விடுதலைப் புலிகளின் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்து தமிழ் தேசியத்தை வீழ்ச்சி அடைய வைத்தோம் என்ற வரலாற்று தவறை இலங்கை தமிழரசு கட்சி மேற்கொள்ளக்கூடாது.

இன்றைய கூட்டத்திற்கு வந்துள்ளவர்கள் அந்த வரலாற்று கரும்புள்ளியை ஏற்படுத்தாதீர்கள் என இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா சுட்டிக்காட்டினார். 1970களில் தமிழ் மக்களின் ஒற்றுமை எவ்வாறு ஏற்படுத்தப்பட்டது அதை கட்டிக் காக்க வேண்டிய பொறுப்புணர்வு அரசியல்வாதிகளுக்கும் இருக்க வேண்டிய அவசியம் பற்றி இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சுட்டிக் காட்டினார். தமிழ் அரசு கட்சி பிரிந்து போட்டியிடும் முடிவு ஒரு வரலாற்று தவறாக அமையும் என வவுனியா நகர சபை உறுப்பினர் சேனாதிராசா சுட்டிக்காட்டினார். எனினும் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் இருந்த ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் அதை ஏற்கவில்லை. இன நலனின் அடிப்படை அல்லாமல் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பின் அடிப்படை சிந்தித்து கூட்டமைப்பை பிரிக்கும் தீர்மானத்தை மேற்கொண்டனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் (07/01/2023) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் உள்ள சாணக்கியனின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது இலங்கை தமிழரசு கட்சி பிரிந்து சென்று உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற வாதம் மெதுமெதுவாக தீவிர படுத்தப்பட்டது இதனை எதிர்த்தவர்கள் சிலர் பேச முடியாத அளவு தீவிரமாக முன்வைக்கப்பட்டது. தனித்து சபைகளை அமைக்க முடியாமல் போனதால் சிரமப்பட்டோம் என மட்டக்களப்பு பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் சோககதையை ஆரம்பித்து வைத்தார். அதை அடுத்து அனேகர் இந்த விதமான சோக கதையை சென்டிமென்ட் மூழ்கடித்தனர். பெலோவினால் தான் பாதிக்கப்பட்டதாக அங்கு பேசியவர்கள் தெரிவித்தனர் குறிப்பாக மட்டக்களப்பில் கோவிந்தன் கருணாகரன் மீது பலர் குற்றம் சாட்டினர். மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சோக கதை சொன்னர் சேலம் உறுப்பினர்களால் நானும் தீர்மானம் எடுக்க முடியாமல் தவிப்பதாக சொன்னார்.
பிரதிநிதிகள் சபையில் பலவித கருத்துக்கள் இருக்கத்தானே செய்யும் என்ற அடிப்படையியை அங்கு யாரும் புரிய வைக்கவில்லை.
அந்த கூட்டத்துக்குச் சென்ற சிலருக்கு அது அரங்கேற்றப்பட்ட ஒரு காவியமா என்ற சந்தேகமும் இருக்கத்தான் செய்கிறது.
எனினும் தலைவர் மாவை சேனாதிராசா அசராமல் அவர்களுக்கு அரசியலை புரிய வைக்க முயன்றபடியி ருந்தார்.
தமிழ் மக்களின் ஒற்றுமையின் அவசியம் போராட்ட வரலாறு பிரிந்து தேர்தலில் போட்டியிட கோருவதன் பின்னால் உள்ள ஆசன ஆசையை போன்றவற்றை சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தல் நடந்தால் ரணில் தர ப்பும் பின்னடைவை சந்திக்கும் தேர்தல் சில வேலை ஒத்தி வைக்கபடலாம் என்றாலும் ஒத்திவைக்க படலாம் என நாம் இருந்தால் சில வேலைகளில் வேட்பு மனு தாக்கல் செய்யும் காலம் முடிந்துவிடும் அதனால் துரிதமாக செயல்பட வேண்டுமென்றார்.
சட்டத்தரணி கே.வி தவராசா கருத்து தெரிவித்த போது தமிழ் மக்களின் அரசியல் அவிலாசைகளை வேண்டுமென்றெடுப்பதற்கு நாம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் தற்போது நடப்பது ஒரு உள்ளூராட்சி தேர்தல் அது நடக்குமா என்பது கூட தெரியாது நாட்டுப் பொருளாதார நெருக்கடியில் பணம் அச்சுட்டு தான் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உள்ளது.
இந்த தேர்தல் தமிழ் மக்களின் இன பிரச்சனை விவகாரத்தில் யாருக்கும் செய்தி சொல்லும் தேர்தல் அல்ல இந்த தேர்தலில் நாம் பிரிந்து போட்டியிட்டார் ஏனைய தரப்புக்கள் அனைத்தும் ஓரணியில் போட்டியிடுவார்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு பங்காளி கட்சிகள் முன்னே அதிலிருந்து வெளியேறியவர்கள் என பெரிய கூட்டணியாக அமையும் அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்று பெயரிலே போட்டியிடுவார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெயரில் போட்டியிடுவதை சட்டரீதியாக தடுக்க முடியாது ஏனெனில் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்ட கட்சி அல்ல அவர்கள் கூட்டமைப்பாக போட்டியிடுவதை மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடும்.
அப்படி ஒரு நிலைமை வந்தால் இலங்கை தமிழரசு கட்சி தனித்துவிடும் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு என உரிமை கோர முடியாமல் போகும்.
2002ல் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சி இது அவர்கள் கட்சியை உருவாக்கிய நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை அது நிறைவேற முன்னரே கூட்டமைப்பை உடைத்தோம் என்றால் வரலாற்றுக் கரும்புள்ளி தமிழரசு கட்சிக்கு வரக்கூடாது. அந்தக் கரும்புள்ளியை இன்றைய கூட்டத்திற்கு வந்தவர்கள் ஏற்படுத்தாதீர்கள்.
நான் கட்சியில் எந்த பொறுப்பிற்கும் ஆசைப்படவில்லை ஆனால் தமிழ்த் தேசியம் என்ற அடிப்படையில் செயற்பட்டு அதற்காக கட்சிக்காக உழைத்து வருகின்றேன். அந்த தமிழ் தேசியத்தை வீழ்ச்சி அடைய வைக்காதீர்கள் என்றார்.
இதை தொடர்ந்து வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டு இருக்கும்போதும் எம் ஏ சுமந்திரன் எழுந்து நின்று சரி அப்படி என்றால் நாம் இப்படி ஒரு தீர்மானம் எடுத்தால் என்ன என்றார்? தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிய தேவையில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே இருக்கும் போது மூன்று கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டால் என்ன? என்றார்.
இதன் போது சட்டத்தரணிகள் எம் ஏ சுமந்திரன் கே வி சவராசா ஆகியோருக்கு இடையே வாய் தர்க்க ம் ஏற்பட்டது. சுமந்திரனின் யோசனையை கடுமையாக எதிர்த்த கே.வி தவராசா இங்கு உள்ளவர்களை என்ன சின்னப் பிள்ளைகள் என நினைத்து விட்டீர்களா? என கேட்டார்.
இந்த வார பிரதிவாதங்களின் போது தமிழரசு கட்சியின் பிரிந்து செல்லும் விவகாரத்தை ஊடகங்கள் செய்தியாக்கும் விதத்தினால் நெருக்கடிக்குள்ளாக்கப்படுவதாக தமிழரசு கட்சியினர் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்தே நேற்று மாலையில் எம். ஏ சுமந்திரன் நாசூக்காக செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த முடிவு எடுக்கப்பட்டதில் தமிழரசு கட்சியின் தலைவரும், தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்ட மாவை சேனாதிராசாவிற்கு உடன்பாடு இருக்கவில்லை என்பது ஊ கிக்கப்படுகின்றது. இதனால்தான் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் இவர் கலந்து கொள்ளவில்லை. எம் ஏ சுமந்திரன் மாத்திரம் கருத்து தெரிவித்திருந்தார்.

நேற்றைய கூட்டத்தில் மதிய உணவாக சோறும், பருப்புக்கறியும்,மீன் பொரியலும், கோழி இறைச்சி கறியும், சொதியும் வழங்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.