உள்ளூராட்சி மன்றத் தேர்தல்- மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் த‌லைமையிலான‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கட்டுப்பணம் செலுத்தியது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக   மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் த‌லைமையிலான‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி அம்பாறை  மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
நேற்று (9) க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை தேர்த‌லுக்காக‌   ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி சார்பில்  மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் த‌லைமையிலான‌  ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியினர்  கட்டுப்பணம் செலுத்தினர்.
இதன் போது  ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சிஸ்ரீலங்கா தலைவர் மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் த‌லைமையிலான‌ குழவினர் இம்முறை தூய அரசியல் கலாச்சாரம் ஒன்றினை முன்னெடுத்து மக்களுக்கான சேவைகளை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டனர்.
இதே வேளை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் த‌லைமையிலான‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கோரியுள்ளது.
திருகோணமலை மாவட்ட கிண்ணியா நகரசபை, கிண்ணியா பிரதேச சபை, புல்மோட்டை பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை, மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபை, ஏறாவூர் நகரசபை, காத்தான்குடி நகரசபை, அம்பாறை மாவட்ட கல்முனை மாநகர சபை, காரைதீவு பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை, அட்டாளைசேனை பிரதேச சபை, அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களில்  ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியுடன் இணைந்து  களமிறங்க விருப்பமுடைய நன்னடத்தை கொண்ட இலங்கை அரசியலில் மாற்றத்தை விரும்பும் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பற்றிய தகவல்களை ஐக்கிய காங்கிரஸ் சார்பில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் உங்கள் முழுப் பெயர், தேர்தல் மாவட்டம், பிரதேசம் என்பவற்றை குறிப்பிட்டு தேசிய அடையாள அட்டையின் பிரதி ஒன்றை அதன் பின் பகுதியில் உங்களது கையொப்பத்தை இட்டு எமக்கு WhatsApp மூலம் அனுப்பி வைக்கவும்.
தலைவர்  0775449017 கொள்கை பரப்பு செயலாளர்  0771676166 எனும் வாட்சப் இலக்கத்திற்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறும்  மேலதிக விடயங்களை 0775449017 எனும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.