குழு மீது நம்பிக்கை வைக்குமாறு சஜித் வேண்டுகோள்!

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, நாட்டிற்கு பணியாற்றக்கூடிய, சர்வதேசத்துடன் உறவுகளை வைத்திருக்கும், சர்வதேச சமூகத்துடன் தொடர்புகளை பேனும் ஒரு திறமையான குழு தேவை எனவும், இவ்வாறானதொரு குழு தன்னுடன் இருப்பதாகவும், அந்த குழு எதிர்க்கட்சியாக இருந்தும் மக்களுக்காக சேவையாற்றியுள்ளதாகவும், எனவே இக்குழு மீது நம்பிக்கை வைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்தார்.

அவ்வாறே ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு மக்களுக்காக பல பணிகளை செய்து கொண்டிருக்கும் போது, சோசலிசம் பற்றி தம்பட்டம் அடிக்கும் சில அரசியல் குழுக்கள் தம்மை தூற்றி சேறு பூசும் விதமாக பேசுவதாகவும், எதிர்க்கட்சியில் இருந்தவாறு மக்களுக்காகவும், பாடசாலை பிள்ளைகளுக்காகவும், தாய்மார்களுக்காகவும் பேட்டித் தன்மையில் சேவையாற்ற முன்வருமாறும் அழைப்பு விடுத்தார்.

74 வருட வரலாற்றில் எதிர்க்கட்சியின் வகிபாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி மாற்றியமைத்ததாகவும், மக்களால் கோரப்படும் முறைமை மாற்றத்தின் இரண்டு முக்கிய அம்சங்களாக “பிரபஞ்சம்”மற்றும் “மூச்சு” வேலைத்திட்டங்கள் அமைந்துள்ளதாகவும், சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் கூட வங்குரோத்து நிலையில் உள்ள வேளையில், அந்த அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் கோரிக்கைகளை தற்போதைய எதிர்க்கட்சியே நிறைவேற்றுவதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்க வேண்டுமாயின் டொலர்கள் தேவை எனவும் ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே தற்போது அதற்கான திறனைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இணையம் சமூகத்தில் விபரீதங்களை உருவாக்கினாலும், அதை நல்ல முறையில் பயன்படுத்தி, தகவல், தரவு, விஞ்ஞான அறிவியலை அணுகி ஸ்மார்ட் மாணவரையும், ஸ்மார்ட் குடிமகனையும் உருவாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறே சில பாடசாலைகள் 2022 இல் போக்குவரத்துச் செலவுகளுக்காக ஒரு மில்லியனுக்கும் அதிகமாக செலவிட்டுள்ளன எனவும், இந்த பஸ்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம் அந்த பணத்தையும் பெற்றோர்கள் எதிர்காலத்தில் மிச்சப்படுத்திக் கொள்வார்கள் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

அரசு, பாடசாலைகளுக்கு கட்டடங்களை வழங்கினாலும், பராமரிக்கப்படுவதில்லை எனவும், இந்த பராமரிப்பு மற்றும் பேனல் ஒவ்வொரு ஆண்டும் நடக்க வேண்டும் எனவும், அதற்கென ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பு இருக்க வேண்டும் எனவும், இவ் அபிப்பிராயம் மக்களிடம் போன்றே ஆட்சியிலும் உருவாக்கப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

´பிரபஞ்சம்’ வேலைத் திட்டத்தின் கீழ் 67 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம் (5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டி ஒன்று இரத்மலானை, லலித் அதுலத்முதலி கல்லூரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடந்த ஜனவரி (06) ஆந் திகதி அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.