தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலை அல்ல

இலங்கையின் பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலை என தெரிவிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சுமார் 175 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இந்த மரணம் எந்த நேரத்திலும் தற்கொலை என்று எந்த தகவலும் இல்லை. எந்த வகையான உறுதியும் இல்லை.

மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன. இந்த கட்டத்தில், கிட்டத்தட்ட 175 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 14 வழக்கு பொருட்கள் அரச இரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் தொலைபேசி பகுப்பாய்வு, வங்கி பதிவுகள் மற்றும் பெற வேண்டிய பல்வேறு ஆவணங்கள் பெறப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.