வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதி நாள்!

வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம் இன்றைய தினம் இடம்பெற்று வருகிறது.

வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த கவனயீர்ப்பு போராட்டம், யாழில் நாவற்குழி சந்தியில் இடம்பெற்றுவருகிறது.

“ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்தி அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தே போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

கடந்த 05 திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 10 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.