கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு மருந்து பொருட்கள் அன்பளிப்பு

கொழும்பு மாநகர ரோட்டரி கழகத்தினது ‘மக்களுக்காக  மக்களிடமிருந்து’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு ரூ.1.5 மில்லியன் பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (10) திகதி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பிரதி வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.எஸ்.ராஜன்திரன் தலைமையில் நடைபெற்றது.
இலங்கையில் கொவிட்-19 பெருந்தொற்றினால் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட, உயிர் காக்கும் மருந்துகளுக்கான மிகப்பெரும் பற்றாக்குறையை எதிர்கொண்ட
வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வைக்கும் இத்திட்டம், முன்னாள் தலைவரான டாக்டர் பாஹிம் ஜமீல் இனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பு மாநகர ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவர்கள் பைஸல் பஹௌடீன் மற்றும் அமான் அஷ்ரப் ஆகியோர் கொழும்பு மாநகர ரோட்டரி கழகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி மருந்துகளை வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்பின் இணைப்பு செயலாளர் எம்.ஐ.எம்.முஸ்தாக்,எஸ்.எல். சனூஸ் பிரதான பொலிஸ் பரிசோரகர்,இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் பீ.எம்.றியாத்  மற்றும் எம்.ஐ.எம்.ஜிப்ரி  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சர்ஜூன் லாபீர் மற்றும் சுஹைல் ஜமால்தீன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியட்சகர்  எஸ்.ராஜன்திரன் மற்றும் டாக்டர் யூ.எல்.சராப்டீன் பெற்றுக் கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.